Tamil News
Home செய்திகள் இணுவத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கோத்தபயாவின் உறுதி மொழி  

இணுவத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கோத்தபயாவின் உறுதி மொழி  

தவறான குற்றச்சாட்டுகளில் சிறைவாசம் அனுபவிக்கும் இராணுவத்தினர் அனைவரும் நவம்பர் 17ஆம் திகதி காலை அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்யப்படுவார்கள் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸ தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இன்று(10) காலை நடைபெற்ற கன்னி உரையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வரலாற்றுப் பெருமையுடைய சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ராஜபக்ஸாக்கள் எதிரிகள் அல்ல. பலமான அரசாங்கத்தை கட்டியெழுப்ப கைகோர்த்துள்ள சுதந்திரக் கட்சிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

கடந்த அரசாங்கம் தேசிய உற்பத்தியான விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது. இலவச உரங்கள், கடனுதவி, காப்புறுதி திட்டங்களை வழங்கியது. எமது நோக்கம் பாரம்பரிய விவசாயத்தைக் கட்டியெழுப்புவதிலே இலக்காகக் கொண்டது. நாம் வழங்கிய அனைத்தும் நல்லாட்சி. தற்போதைய அரசாங்கம் எம்மை பழிவாங்குவதற்காக இவற்றை இரத்துச் செய்தது.

பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான சிறப்புத் திட்டங்ளை உருவாக்கியுள்ளோம். கல்வியினால் மாத்திரமே சர்வதேச மட்டத்தில் தலை நிமிர்ந்து இருக்க முடியும். புதிய கற்கை நெறிகளை உள்ளடக்கிய கல்வி முறைமையை செயற்படுத்தி, இளம் தலைமுறையினருக்கு வழங்குவோம்.

தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தி, சுதந்திரத்தை அனைவருக்கும் சமவுரிமையாக்குவோம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என இக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

இந்த அறிவிப்பு இராணுவத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version