Tamil News
Home செய்திகள் அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­வதால் கூட்டமைப்பினர் மாத்­தி­ரமே பய­ன­டைந்­துள்­ளார்கள்- செஹான் சேம­சிங்க

அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­வதால் கூட்டமைப்பினர் மாத்­தி­ரமே பய­ன­டைந்­துள்­ளார்கள்- செஹான் சேம­சிங்க

அர­சியல் தீர்வு  என்ற விட­யத்தை குறிப்­பிட்டுக் கொண்டு  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­திற்கு தொடர்ந்து ஆத­ரவு வழங்கி வரு­கின்­றது. ஆத­ரவு வழங்­கு­வதால் கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள் மாத்­தி­ரமே பெரிதும் பய­ன­டைந்­துள்­ளார்கள். ஆனால் எதிர்­பார்ப்­புடன்  அபி­வி­ருத்­திகள் ஏதும் பெற்றுக் கொள்­ளாத  வடக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து ஏமாற்­ற­ம­டைந்­துள்­ளார்கள்.  இறு­தியில் அபி­வி­ருத்­தியும்   அர­சியல் தீர்வும்   வெறும் கானல் நீரா­கவே    காணப்­படும் என்று  எதி­ர­ணியின்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  செஹான் சேம­சிங்க தெரி­வித்தார்.

பொது­ஜன பெர­மு­னவின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்   பெற்ற  ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே   அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தமிழ்  மக்­களை  பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சி­யல்­வா­திகள் எவரும்    தமிழ் மக்­களின் அடிப்­படை   பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்­க­வில்லை. மாறாக  அர­சாங்­கத்தில் இருந்து  வரப்­பி­ர­சா­தங்­களை மாத்­தி­ரமே  பெற்றுக் கொண்­டுள்­ளார்கள் என்று  எதி­ர­ணியின்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  செஹான் சேம­சிங்க தெரி­வித்தார்.

தமிழ் மக்­களின் ஆத­ர­வினை  முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­விற்கு பெற முடி­யாது என்ற தவ­றான  கருத்­தினை அர­சாங்கம் தற்­போது குறிப்­பிட்டு கொள்­கின்­றது. நிச்­சயம் வடக்கு கிழக்கு உட்­பட ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களின் ஆத­ர­வுடன்  ஆட்சி மாற்றம் ஏற்­படும்.  வடக்கு மக்கள் தற்­போது  எவர் தலை­மை­யி­லான ஆட்சி  சிறந்­தது என்­பதை தீர்­மா­னித்து விட்­டார்கள்.

தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சி­யல்வா­திகள் எவரும் தமிழ் மக்­களின்  அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்­க­வில்லை. மாறாக தேவையற்ற நிறை­வே­றாது என்று தெரிந்த ஒரு விட­யத்­திற்கு முக்­கி­யத்­துவம் வழங்கி  காலத்தை வீண­டித்து  தமிழ் மக்­களை தொடர்ந்து ஏமாற்றி வரு­கின்­றார்கள்.

மறு­புறம் மலை­யக மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும்  அர­சி­யல்­வா­திகள் பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு  எவ்­வித  நியா­ய­மான தீர்­வையும் பெற்றுக் கொடுக்­க­வில்லை. ஒவ்­வொரு வருட ஆரம்­பத்­திலும்  இறு­தி­யிலும் மலை­ய­கத்தில் இயற்கை அனர்த்தம் ஏற்­ப­டு­வது எதிர்­பார்க்கக் கூடி­ய­தொன்­றாக காணப்­ப­டு­கின்­றது. ஆனால் மலை­யக மக்­க­ளுக்கு  நியா­ய­மான  தீர்­வினை அர­சாங்கம் வழங்­க­வில்லை.  அர­சாங்­கத்­திற்கு  அழுத்தம் கொடுப்­ப­தாக மலை­யக அர­சி­யல்­வா­திகள்  வெறும் பேச்­ச­ளவில் மாத்­தி­ரமே  கருத்­து­ரைக்­கின்­றார்­களே தவிர  செய­ல­ளவில் எத­னையும்   வினைத்­தி­ற­னாக  செயற்­ப­டுத்­த­வில்லை.

தமிழ் மக்கள் தொடர்ந்து தம்மை ஏமாற்றி அதில் சொகு­சாக வாழும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு  ஆத­ரவு  வழங்­கு­வதால் எவ்வித பயனும் ஏற்படாது. கடந்த நான்கு வருட காலமாக  அரசாங்கத்தில்  தமிழ் மக்களின் அடிப்படை  பிரச்சினைகள் வெறும்  பேசுபொருளாகவே காணப்பட்டது. நிச்சயம் எமது  அரசாங்கத்தில்  பாதிப்பற்ற விதத்தில் வடக்கிற்கு தீர்வும் மலையக மக்களுக்கு பொருளாதார தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.

Exit mobile version