Tamil News
Home உலகச் செய்திகள் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்?

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்?

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் “மேலும் வன்முறையை தூண்டும் ஆபத்து உள்ளதால்”  இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் கணக்கிலிருந்து (@realDonaldTrump) பதிவிடப்பட்ட சமீபத்திய ட்வீட்டுகள் மற்றும் அதையொட்டி உள்ள சூழ்நிலையையும் தீவிர மதிப்பாய்வு செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் கூறுகிறது.

முன்னதாக, அமெரிக்க நாடளுமன்றத்தின் மீது அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து அவரது ட்விட்டர் கணக்கு 12 மணிநேரத்திற்கு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ட்ரம்ப் மீண்டும் தங்களது சமூக ஊடகத்தின் விதிமுறைகளை மீறினால், அவர் “நிரந்தரமாக” தடைசெய்யப்படுவார் என்று அப்போது ட்விட்டர் எச்சரித்திருந்தது.

Exit mobile version