Tamil News
Home உலகச் செய்திகள் அமெரிக்க அதிபருக்கு எதிராக அமெரிக்காவில் உயிருள்ள சிலைகள்

அமெரிக்க அதிபருக்கு எதிராக அமெரிக்காவில் உயிருள்ள சிலைகள்

அமெரிக்க அதிபர் குடியுரிமை மற்றும் சுதந்திரத்தைப் பறித்தவர் என எழுதப்பட்ட பீடத்தில் ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் மனிதர்களை சிலைகள் போல் நிற்க வைத்து, ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் உயிருள்ள சிலைகளை உருவாக்கியுள்ளனர்.

பிளக் தொடர்பான போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் தாக்கும் போது ட்ரம்ப் வேடிக்கை பார்ப்பது போலவும், உச்ச நீதிமன்றத்தில் காலி இடத்தை நிரப்புமாறு எழுதப்பட்ட பீடத்தில் ட்ரம்ப் காலி இடத்தில் சிறுநீர் கழிப்பது போலவும் உருவாக்கப்பட்ட உயிருள்ள சிலைகள் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளன.

இவ்வகையான சிலைகள் அமெரிக்காவின் பல இடங்களிலும் உருவாகி உள்ளன. இந்த சிலைகளின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

தற்போது அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version