Home செய்திகள் கொழும்பு வந்தடைந்தார் சீன பாதுகாப்பு அமைச்சர் – ஜனாதிபதி, பிரதமருடன் இன்று பேச்சு

கொழும்பு வந்தடைந்தார் சீன பாதுகாப்பு அமைச்சர் – ஜனாதிபதி, பிரதமருடன் இன்று பேச்சு

464 Views

சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் நேற்று இரவு இலங்கை வந்தடைந்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகைதந்துள்ள அவர், ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் சீனாவின் இரண்டாவது சிரேஷ்ட அதிகாரி இவர் ஆவார்.

இதற்கு முன்னர் கடந்த ஒக்டோபரில் சீனாவின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் யாங் ஜீச்சி நாட்டுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version