Tamil News
Home செய்திகள் X-PRESS PEARL கப்பல் விபத்து: இலங்கையின் சமுத்திர சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அழிவு

X-PRESS PEARL கப்பல் விபத்து: இலங்கையின் சமுத்திர சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அழிவு

X-PRESS PEARL கப்பலில் பாரிய எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளமையை செய்மதி படங்களில் காணக்கூடியதாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் Sky News செய்திச் சேவை Planet Labs எனும் செய்மதி நிழற்பட சேவையிலிருந்து அண்மையில் பெற்றுக்கொண்ட சில நிழற்படங்களை பிரசுரித்து கப்பலில் பாரியளவில் எண்ணெய் கசிந்துள்ளதாக  சுட்டிக்காட்டியுள்ளது.

வௌ்ளி நிறத்தில் செய்மதி நிழற்படத்தில் காணப்படுகின்ற இந்த படலம் 100 மீட்டருக்கு மேல் பரவியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது இலங்கையின் சமுத்திர சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அழிவு என Sky News தெரிவித்துள்ளது.

ஆனால் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என இலங்கை  தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எண்ணெய் கசிவு ஏற்படவில்லை. நிறம் மாறிய நீர் மற்றும் நீரில் ஏற்பட்டுள்ள சிறு மாற்றங்களே செய்மதி மூலம் அடையாளம் காணப்படுகின்றது. இலங்கை விமானப் படை பதிவு செய்துள்ள நிழற்படங்களை நோக்குமிடத்து, கப்பலை சூழ நீரின் நிறம் மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

கொள்கலன் கழுவிச் செல்லப்படுவதாலேயே நீரின் நிறம் மாறியுள்ளது என மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் சமுத்திரவியல் விஞ்ஞானி பேராசிரியர் சரித்த பட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

Exit mobile version