Tamil News
Home செய்திகள் இந்தியாவின் மிரட்டல்களுக்கு பணியமாட்டோம் – பி.பி.சி

இந்தியாவின் மிரட்டல்களுக்கு பணியமாட்டோம் – பி.பி.சி

அண்மையில் புதுடில்லி மற்றும் மும்பாய் ஆகிய பகுதிகளில் உள்ள பி.பி.சி அலுவலகங்கள் மீது இந்திய அரசு மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகள் எமது நடவடிக்கைகளை பாதிக்கப்போவதில்லை, நாம் அச்சமோ, ஒரு பக்கச் சார்போ இன்றி எமது செய்திகளை வழங்குவோம் என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பி.பி.சி செய்தி நிறுவனத்தின் பணிப்பாளர் ரிம் டேவி கடந்த வியாழக்கிழமை (23) தெரிவித்துள்ளார்.

பக்கச்சார்பற்ற முறையில் செய்திகளை வெளியிடுவதை தவிர எமக்கு முக்கியமானது எதுவுமில்லை. எமது பணியாளர்கள் தமது கடமைகளை சரிவர செய்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பக்கச்சார்பற்ற சுதந்திரமான செய்திகளை வழங்குவதே எமது குறிக்கோள். எமக்கென தனியான செயற்திட்டங்கள் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பி.பி.சி நிறுவனம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டதை தொடர்ந்து இந்திய அரசுக்கும் பி.பி.சி நிறுவனத்திற்கும் இடையில் மோதல்கள் ஆரம்பமாகியிருந்தன.

ஆவணப்படத்தை தடை செய்த இந்திய அரசு, பி.பி.சியின் இந்திய அலுவலகங்களில் வரித்துறை அதிகாரிகள் சோதனைகளையும் மேற்கொண்டிருந்தனர். பி.பி.சி நிறுவனம் வரி செலுத்துவதில் சில முறைகேடுகளை மேற்கொண்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய அதிகாரிகளின் இந்த சோதனைக்கு எதிராக பிரித்தானியாவின் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தனது அதிதிருப்தியை பதிவு செய்திருந்தார்.

Exit mobile version