அன்னை பூபதி அவர்களின் உண்ணாவிரதம் 19.03.1988 அன்று தொடங்கியது Tamil News
Home செய்திகள் வேலன் சுவாமிகள் பிணையில் விடுவிப்பு

வேலன் சுவாமிகள் பிணையில் விடுவிப்பு

 சட்டவிரோத ஒன்றுகூடலில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த தவத்திரு வேலன் சுவாமிகள் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பொங்கல் விழா நடைபெற்ற சந்தர்ப்பத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தில் வேலன் சுவாமிகள் பங்கேற்றிருந்தார்.

இந்த நிலையில், சட்டவிரோதமான ஒன்றுகூடலில் ஈடுபட்டமை, களேபரத்தில் ஈடுபட்டமை, காயமேற்படுத்தியமை, அரச ஊழியர்களுக்கு இடையூறு விளைவித்தமை, அத்துமீறி பிரவேசித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் நேற்று(18) கைது செய்யப்பட்டதாக  காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்தது.

யாழ்.நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவர் இன்று(19)  விடுவிக்கப்பட்டதாக  காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version