Tamil News
Home செய்திகள் உள்ளூராட்சி சபைத் தேர்தல்: நுவரெலியாவில் ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூட்டணி

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: நுவரெலியாவில் ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூட்டணி

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் தேர்தல் உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் நவின் திஸாநாயக்க, நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் இ.தொ.காவும் கூட்டணியாக போட்டியிடும் என தெரிவித்தார்.

இரண்டு கட்சிகளும் ஒன்பது முதல் 10 உள்ளூராட்சி மன்றங்களில் யானை சின்னத்திலும், 11 முதல் 12 வரையான பிரதேச சபைகளில் ‘கோழி’ சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேர்தல் உடன்படிக்கை இரு கட்சிகளுக்கும் நன்மை பயக்கும் என முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Exit mobile version