Home உலகச் செய்திகள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள்  முழுமையாக வெளியேறும் – வெள்ளை மாளிகை தகவல்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள்  முழுமையாக வெளியேறும் – வெள்ளை மாளிகை தகவல்

US Troops To Leave Afghanistan By End Of August: White House

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய அல்-கொய்தா அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறி ஆப்கானிஸ்தான் மீது 2001-ம் ஆண்டு அமெரிக்கா போர் தொடுத்தது.  

இதனால் ஆப்கானிஸ்தானின் அரசுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதையடுத்து நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அமெரிக்க அரசுக்கும், தலிபானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட் டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்ப பெறப்படும் என்று ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் புதிய அதிபராக பதவி ஏற்ற ஜோபைடன் கூறும்போது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதிக்குள் திரும்ப பெறப்படும் என்று தெரிவித்தார்.

இப்பணி முழுவீச்சில் நடந்து வந்த நிலையில் பக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. இந்த விமானப்படை தளம் ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய விமானப்படை தளம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டுகளுக்குப்பின்  அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஓகஸ்டு மாத இறுதிக்குள் முழுமையாக வெளியேறும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Exit mobile version