Home உலகச் செய்திகள் ஆஃப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை விட்டு எந்த அறிவிப்புமின்றி வெளியேறிய அமெரிக்க வீரர்கள்

ஆஃப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை விட்டு எந்த அறிவிப்புமின்றி வெளியேறிய அமெரிக்க வீரர்கள்

202008050433047023 Decided to reduce the number of American soldiers in SECVPF ஆஃப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை விட்டு எந்த அறிவிப்புமின்றி வெளியேறிய அமெரிக்க வீரர்கள்

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானத் தளத்தை விட்டு வெளியேறியுள்ளதாக, அந்நாட்டு இராணுவ தெரிவித்துள்ளது.  

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கப் படைகள் இந்த விமானத் தளத்தை பயன்படுத்தி வந்ததாகவும், இந்நிலையில், இந்த தளத்தின் புதிய ஆப்கான் தளபதி யிடம்  முறையாக எவ்வித அறிவிப்பும் தெரிவிக்காமலேயே அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ளதாகவும்  கூறப்படுகின்றது.

இது குறித்து Aljazeera  செய்தி ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ள பக்ராம் விமானத் தளத்தின் புதிய தளபதி ஜெனரல் மிர் அசாதுல்லா  கோஹிஸ்தாணி, “அமெரிக்கா படைகள் இந்த தளத்தை விட்டு வெளியேறிவிட்டதாக வதந்தி பரவியதாக எண்ணி னோம், ஆனால் காலை 7 மணியளவில் அவர்கள் வெளியேறியது உறுதிப்படுத்த ப்ப ட்டது” என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், பரந்து பட்ட அந்த விமானத்தளத்தை பார்வையிட ஆப்கான் இராணு வம் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்க படைகள் வெளியேறியது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அர சின் மூத்த அதிகாரி , அமெரிக்கப்படைகள் படைகள் வெளியேறியுள்ளதாகவும், தற் போது எல்லாம் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

Exit mobile version