Home உலகச் செய்திகள் உலக நாடுகள் அணு ஆயுதங்களை கைவிட வேண்டும்- ஜப்பான்

உலக நாடுகள் அணு ஆயுதங்களை கைவிட வேண்டும்- ஜப்பான்

cropped image l உலக நாடுகள் அணு ஆயுதங்களை கைவிட வேண்டும்- ஜப்பான்

அணு ஆயுதங்களை கைவிட உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று ஜப்பான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

2ம் உலகப் போரின் போது, 1945 ஓகஸ்ட் 6ம்  திகதி ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய  இரு நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொது மக்கள் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். அணுக்கதிர் வீச்சின் தாக்கத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உடல்நலம் பாதித்து மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துயரம் நிறைந்த சம்பவத்தின்  76ம் ஆண்டு நினைவு தினம்   ஹிரோஷிமா நகரில் இன்று நடைபெற்றது. ஜப்பான் பிரதமர் யோஷீஹிடே சுகா பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் கொல்லப்பட்ட பொது மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து  உரையாற்றிய ஜப்பான் பிரதமர் யோஷீஹிடே சுகா,

“அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்.  அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஜப்பான் அரசு தொடர்ந்து வழங்கும். அணு ஆயுத குவிப்பு முயற்சியை உலக நாடுகள் கைவிட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து சுதந்திரத்தை குறிக்கும் வகையில் கூண்டில் அடைக்கப்பட்ட புறாக்கள் பறக்க விடப்பட்டன.

Exit mobile version