Tamil News
Home செய்திகள் மக்களை கலந்தாலோசிக்காமல் தீர்மானங்களை எடுக்கலாம் என அரசாங்கம் கருதுகின்றது- உலக வங்கியின் முன்னாள் அதிகாரி கவலை

மக்களை கலந்தாலோசிக்காமல் தீர்மானங்களை எடுக்கலாம் என அரசாங்கம் கருதுகின்றது- உலக வங்கியின் முன்னாள் அதிகாரி கவலை

மிகவேகமாக அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொதுமக்கள் முன்னொருபோதும் இல்லாத  நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள போதிலும் வரி அதிகரிப்பு போன்றவற்றின் மூலம் வருமானத்தை அதிகரிப்பதற்கான துணிச்சலான நடவடிக்கைகளை இலங்கை எடுத்துள்ள அதேவேளை வரிகள் தொடர்பான முக்கிய தீர்மானங்களை மூடிய கதவுகளின் பின்னால் எடுக்கும் பாரிய தவறை கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்தும் செய்கின்றனர் என பொருளாதார நிபுணர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்கள் மற்றும் நிறுவனங்களே வரிவிதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்பதால் தீர்மானங்களை எடுக்கும் நடவடிக்கைகளில் அவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்வது மிகவும் அவசியம் என கலாந்தி எஸ்தேவராஜன் தெரிவித்துள்ளார்.

வரிதொடர்பான விடயங்கள் மக்களால் புரிந்துகொள்ள முடியாத விடயங்கள் என கருதுவதை அரசாங்கம் கைவிடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையிலும் ஏனையநாடுகளிலும் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும்  வரிகள் தொடர்பானவை நவீனமான விடயங்கள் பொதுமக்கள் அதனை புரிந்துகொள்ள மாட்டார்கள் இதன் காரணமாக வரிகள் தொடர்பான விடயங்களை மூடிய கதவுகளின் பின்னால் எடுக்கவேண்டும் என கருதுகின்றனர் என தேவராஜன் தெரிவித்துள்ளார்.

வெரிட்டே ரிசேர்ச் ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version