Home செய்திகள் ஆப்கனில் தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற பெண்களுக்கு தலிபான்கள் தடை

ஆப்கனில் தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற பெண்களுக்கு தலிபான்கள் தடை

பெண்களுக்கு தலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தானில் தொண்டு நிறுவனங்களில் கள உதவியாளர்களாக பெண்கள் செயல்படவும், உயிருக்குப் போராடும் மக்களை காக்கும் பணியில் ஈடுபடவும் பெண்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் டோலோ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,

தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின்  ஆப்கானிஸ்தான்  பொருளாதாரம் நாளுக்கு நாள் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் கடும் விலை ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, வறுமை, பட்டினி போன்றவை ஆப்கானிஸ்தானில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஐ.நா. மற்றும் உலக சுகாதார அமைப்பு மட்டும் மனிதநேய அடிப்படையில் உதவிகளை வழங்கி வருகின்றன.

ஆனால், இந்த மனிதநேய உதவியிலும், தொண்டு நிறுவனங்கள் சார்பில் செய்யப்படும் உதவியிலும் பெண்களைப் பயன்படுத்த  தலிபான்கள் தடை விதி்த்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், வீட்டில் இருக்கும் பெண்களின் உயிர்காக்கும் சேவை, தேவையான அடிப்படை உதவிகளுக்கு கூட பெண்களை களப்பணியாளர்களாக, கள உதவியாளர்களாக பயன்படுத்த தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

மனித நேய உதவிகளைக் கூட பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் வழங்க முடியாத நிலையில்தான் இருக்கிறோம். 34 மாகாணங்களில் 3 மாகாணங்களில் மட்டும்தான் பெண்களை களப்பணியாளர்களாக பணியாற்ற தலிபான்கள் அனுமதித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version