Home செய்திகள் முல்லைத்தீவு மீனவர்களுக்கும் சுமந்திரனுக்குமிடையில் சந்திப்பு

முல்லைத்தீவு மீனவர்களுக்கும் சுமந்திரனுக்குமிடையில் சந்திப்பு

முல்லைத்தீவு மீனவர்களுக்கும் சுமந்திரனுக்குமிடையில் சந்திப்பு

முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக முல்லைத்தீவு மீனவர்களுக்கும் சுமந்திரனுக்குமிடையில் சந்திப்பு ஒன்று முல்லைத்தீவு கள்ளப்பாடு பொது நோக்கு மண்டபத்தில் இன்று  இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும்  முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சந்திரலிங்கம் சுகிர்தன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மீனவர்கள்  தாம் அன்றாடம் எதிர்நோக்குகின்ற மீன்பிடி நடவடிக்கை தொடர்பான பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் தெரிவித்தனர்.

தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

போராட்டங்களின் மூலமாகவே பிரச்சனைகளுக்கு தீர்வுகாணமுடியுமெனவும், அனைத்தையும் சட்டரீதியாக தீர்த்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.

குறிப்பாக தென்னமரவடிப்பகுதியில் தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களுடைய வயல் நிலங்கள் தொடர்பாக சட்ட ரீதியாக தீர்வு காணப்பட்டு நீதிமன்ற கட்டளையை பெற்ற போதிலும் அதனை நடைமுறைப் படுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காது இருக்கின்றனர்.

பௌத்த பிக்குகளை தம்மால் கைது செய்ய முடியாது என காவல்துறையினர்  தெரிவிப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

Exit mobile version