Tamil News
Home செய்திகள்  பெருந்தோட்டங்களில் பட்டினி சாவு நடக்க முன் நடவடிக்கை எடுங்கள்-மனோ கணேசன்

 பெருந்தோட்டங்களில் பட்டினி சாவு நடக்க முன் நடவடிக்கை எடுங்கள்-மனோ கணேசன்

பெருந்தோட்டங்களில் பட்டினி சாவு நடக்க முன் நடவடிக்கை எடுங்கள் என்று பாராளுமன்றத்தில்   அரசிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்   வலியுறுத்தியுள்ளார்.

இது தொடபில் மேலும் மனோ தெரிவிக்கையில்,

“பெருந்தோட்டத் துறையில் நிலவும் பாரதூரமான நிலைமைகளை பின்வரும் உலக நிறுவன அறிக்கைகள் காட்டுகின்றன.

(1) ஐ.நா. சபையின் உணவு விவசாய நிறுவனம்/உலக உணவு நிறுவனத்தின் இலங்கை உணவு நெருக்கடி கணிப்பீடு பற்றிய விசேட கூட்டறிக்கை

(2) ஐ.நா. சபையின் உலக உணவு நிறுவனத்தின் கண்காணிப்பு அறிக்கை

(3) இலங்கை செஞ்சிலுவை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களின் பொருளாதார ஆய்வறிக்கை

(4) நவீன அடிமைத்துவம் பற்றிய ஐ.நா. விசேட அறிக்கையாளர் டொமாயா ஒபகடாவின் ஐ.நா. மனித உரிமை ஆணையக அறிக்கை நாட்டின் உணவு நெருக்கடி பற்றிய குடும்ப மட்ட ஆய்வுகளில், பெருந்தோட்டத் துறையில் அதிகபட்ச 51 விகிதம் பதிவாகி உள்ளது.

நாட்டின் நகர துறையில் 43 விகிதமும், கிராமிய துறையில் 34 விகிதமும் பதிவாகியுள்ளன. இலங்கையில் இன்று ஒப்பீட்டளவில் மிகவும் நலிவுற்ற பிரிவினர் 51 விகிதமான பெருந்தோட்ட மக்கள் என்பதைக் கவனியுங்கள்.

பெருந்தோட்டங்களில் துர்ப்பாக்கிய பட்டினி சாவு நடக்க முன் இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம்என்பதையும் கவனியுங்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

Exit mobile version