Home செய்திகள் இலங்கை: ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐநா கண்டனம்

இலங்கை: ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐநா கண்டனம்

ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கை

இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளிற்கு ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டங்களின் போது இலங்கை அரசாங்கம் ஒன்றுகூடுவதற்கான வெளிப்படுத்துவதற்கான உரிமையை அடிப்படை உரிமைகளை உறுதி செய்யவேண்டும் எனவும் ஐ.நா.நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சமீபத்தில் அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டது, சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை குறித்து நாங்கள் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள ஐ.நாவின் நிபுணர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக அதிகளவு கண்ணீர் புகை பிரயோகம் நீர்த்தாரை பிரயோகத்தை பயன்படுத்துவதை நாங்கள் கண்டிக்கின்றோம். சமூக ஊடகங்கள் சமீபத்தில் முடக்கப்பட்டதையும் கண்டிக்கின்றோம் என தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஏனையவர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியுங்கள் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மக்களுடன் ஆக்கபூர்வமான வெளிப்படையான பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் ஈடுபடவேண்டும் எனவும் நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நியாயபூர்வமாக உடன்பட மறுத்தலை அதிகாரிகள் தேவையற்ற அளவுக்கதிகமான பலத்தை பயன்படுத்தி எதிர்கொள்ளக்கூடாது. ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக பலத்தை பயன்படுத்துவது உடன்பட மறுப்பவை அமைதியாக வெளிப்படுத்துவதை பாதிக்கும் மேலும் பதற்றநிலையை அதிகரிக்கும் எனவும் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version