Tamil News
Home செய்திகள் ஐ.எம்.எவ்வின் இரண்டாவது கட்ட கடனும் இலங்கைக்கு கிடைத்தது

ஐ.எம்.எவ்வின் இரண்டாவது கட்ட கடனும் இலங்கைக்கு கிடைத்தது

சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எவ்.) வழங்கிய இரண்டாவது கட்ட கடன் இலங்கைக்கு கிடைத்துள்ளது. இந்தக் கடனை இலங்கை பெறுவதற்கு நாணய நிதியத்தின் ஒப்புதலுக்கு மூன்று மாதங்கள் தாமதமானது.

இந்த கடன் தொகையை இலங்கைக்கு விடுவிக்கவேண்டும் என்று நாணய நிதியத்தின் இலங்கைக் கடன் ஒப்புதல் பணியின் தலைவர் பீற்றர் போவர் சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால், நிதி நிர்வாக குழுவின் ஒப்புதல் தாமதமானது.

இந்த நிலையில், இலங்கைக்கு இரண்டாவது கடன் தவணையாக 33 கோடி அமெரிக்க டொலர் கிடைத்துள்ளது. இந்த பணம் நாட்டுக்கு சொந்தமானது என்பதாலேயே இந்த நாட்களில் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து ரூபாயின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக நிதி சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version