Home செய்திகள் வர்த்தக நடவடிக்கைகளுக்கு  இலங்கை ஓர் சவாலான நாடு – அமெரிக்கா

வர்த்தக நடவடிக்கைகளுக்கு  இலங்கை ஓர் சவாலான நாடு – அமெரிக்கா

வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை சவாலான ஓர் நாடு என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உறுதி செய்ய முடியாத பொருளாதார கொள்கை, அரசாங்க சேவைகளின் திறனற்ற சேவைகள், வெளிப்படையற்ற அரசாங்கத்தின் கொள்வனவு நடவடிக்கைகள் போன்றவற்றால் பரிவர்த்தனை செலவுகள் அதிகமாக காணப்படுகின்றன என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஒப்பந்தங்களை மதிக்காதிருத்தல் அதிகாரிகளாக நண்பர்கள் சகாக்களை நியமித்தல், போன்றவற்றின் காரணமாக முதலீட்டார்கள் கரிசனைகளை வெளியிடுகின்றனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அத்தோடு ஊழலிற்கு எதிராக போராடுவதற்கு போதிய சட்டங்கள் உள்ள போதிலும் அதனை நடைமுறைப் படுத்துவது பலவீனமாக உள்ளது  என்றும்  2021 முதலீட்டு சூழல் குறித்த அறிக்கையில் அமெரிக்கா  தெரிவித்துள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Exit mobile version