348 Views
இலங்கையர் பாகிஸ்தானில் கொடூரக் கொலை: பாகிஸ்தானில் தனியார் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் தொழிற்சாலையின் ஏற்றுமதி முகாமையாளரை அடித்துக்கொலை செய்த பின்னர் உடலை தீயிட்டுக்கொளுத்தியுள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் சியால்கோட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார என்பவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படுகொலைக்கான காரணம் என்னவென்பது குறித்து காவல்துறையினர் இதுவரையில் தெரிவிக்கவில்லை.