Home செய்திகள் சிவகங்கை படகுச் சேவை பெப்ரவரி 1 ஆம் திகதி ஆரம்பம்

சிவகங்கை படகுச் சேவை பெப்ரவரி 1 ஆம் திகதி ஆரம்பம்

sivagangai சிவகங்கை படகுச் சேவை பெப்ரவரி 1 ஆம் திகதி ஆரம்பம்யாழ்ப்பாணத்தை தமிழகத்துடன் இணைக்கும் படகு சேவை பெப்ரவரி முதலாம் திகதி தொடங்குகிறது.

‘சிவகங்கை’ என்ற படகு தனது முதல் பயணத்தை நாகபட்டினத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி நான்கு மணி நேரத்தில் காங்கேசன்துறை சென்றடையும் என்று இந்தப் படகு சேவையை இயக்கும் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

“150 பயணிகள் இந்தப் படகில் பயணிப்பார்கள். ஒரு வழிப் பயணத்துக்கு 80 அமெரிக்க டொலர், அதாவது 6 ஆயிரத்து 600 இந்திய ரூபாய் அல்லது 26 ஆயிரம் இலங்கை ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். அரசு வரிகளையும் இதர கட்டணங்களையும் குறைப்பதன் மூலம் இந்தப் பயணச்சீட்டின் விலையை மேலும் குறைப்பது குறித்து இந்திய, இலங்கை அரசுகளிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு வழிப் பயணத்திற்கான கட்டணத்தை 57.50 அமெரிக்க டொலர் அதாவது சுமார் 18,500 ரூபா அளவுக்குக் குறைக்க விழைந்துள்ளோம்” என்றும் நிரஞ்சன் தெரிவித்தார்.

ஒவ்வொரு பயணியும் 60 கிலோ எடை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார் என்று அவர் கூறினார். “இந்தப் படகு சேவை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான ஆதரவைப் பெற்றிருப்பதுடன் இலங்கை அரசாலும் மனமார வரவேற்கப்படுவது சிறப்பு. அதற்கான காரணம்: யாழ் – தமிழக மக்களுக்கிடையேயான வலுவான தொடர்பை இது ஏற்படுத்தும்” என்றும் தெரிவித்தாா்.

Exit mobile version