Home செய்திகள் இரணைமடு குளத்தை அழிக்கும் நோக்கில் மணல் கடத்தல்- அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

இரணைமடு குளத்தை அழிக்கும் நோக்கில் மணல் கடத்தல்- அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

இரணைமடு குளத்தை அழிக்கும் நோக்கில்

இரணைமடு குளத்தை அழிக்கும் நோக்கில் மணல் கடத்தல்: மதுபான கடத்தல்களை கண்டறிந்து தண்டனை கொடுக்கும் காவல்துறையினர் இரணைமடுவில் கனரக வாகனங்களில் மண்ணகழ்வதை கண்டுகொள்வதில்லை என கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்திற்கு மிக முக்கியமான குளமாகவும், விவசாய குளமாகவும் காணப்படும் இரணைமடு குளத்தில் அதிகளவான மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்றது. குறித்த மண்ணகழ்வினை தடுப்பதற்கு  காவல்துறையினர் முனைப்பு காட்டுவதாக தெரியவில்லை.

கனரக வாகனங்களைக் கொண்டு  மணல் வெளிமாவட்டங்களிற்கு ஏற்றி செல்லப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்தவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இரணைமடு குளம் முழுமையாக அழிவடைந்துவிடும். இந்த மண்ணகழ்வினை கட்டுப்படுத்ததாமையானது குளத்தினை அழிப்பதற்கான திட்டமாக இருக்குமோ என்று சந்தேகம் எழுகின்றது.

சாதாரணமாக  மதுபானம் கடத்தப்படுவது தொடர்பில்  காவல்துறையினர்  கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்துகின்றனர். ஆனால் இவ்வாறு பாரிய மண் கொள்ளை இடம்பெறும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தவறுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி,   முழுமையாக மணல் கடத்துவதை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Exit mobile version