Home செய்திகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 62 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 62 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

IMG 20210819 WA0041 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 62 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 62 பேருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான்   நீதிமன்று உத்தரவிட்டுள்ளனது.

குறித்த வழக்கு மாவட்ட நீதிபதி ஏ .சி .றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு இன்று வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது.

கொரோனா காரணமாக குறித்த தாக்குதல் சம்பவத்துடன் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனைவரும் சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் இன்று விசாரணைக்காக ஆஜர் படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு விசாரணைக்காக வந்த சந்தேக நபர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த காலங்களில் அம்பாறை காத்தான்குடி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைதாகி பல மாதங்களிற்கு மேலான விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் காவல் துறையினரின் ஆட்சேபனையுடன் அனைத்து சந்தேக நபர்களதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு இவ்வழக்கு விசாரணை அடுத்த வழக்கு தவணையை செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் அனைவரும் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர். சந்தேக நபர்கள் அனைவரும் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

இவர்களை பார்வை யிடுவதற்ககாக அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் நீதிமன்ற வாசலிம் குழுமியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version