Home செய்திகள் நினைவுகூரும் நிகழ்வுகளை தடை செய்வது முரணானது – பிரித்தானியா

நினைவுகூரும் நிகழ்வுகளை தடை செய்வது முரணானது – பிரித்தானியா

நினைவுகூரும் நிகழ்வுகளை தடை

நினைவுகூரும் நிகழ்வுகளை தடை செய்வது முரணானது – பிரித்தானியா: இலங்கையில் மனித உரிமை நடைமுறைகள் தொடர்ந்து சீரழிந்து வருவதாக பிரித்தானியாவின் வெளிவவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுக்கான (ஜனவரி முதல் ஜூன் வரை) அறிக்கையானது இந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது.

31 நாடுகள் தொடர்பில் கவலையை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கை அரசு தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மை இன மக்கள் மீதான புறக்கணிப்புக்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. நலன்புரி அமைப்புக்கள் மீதான தடைகள் மேற்கொள்ளப்படுவதுடன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் நினைவுகூரும் நிகழ்வுகளுக்கும் தடைகள் விதிக்கப்படுகின்றன.

பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து கண்காணிப்புக்களை மேற்கொள்வதுடன், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்திப் பலர் எழுந்தமானமாக கைது செய்யப்படுகின்றனர். படையினருக்கான மேலதிக அதிகாரங்களையும் அரசு வழங்கியுள்ளது.

தண்டனை பெற்ற படுகொலையாளிகளுக்கு அரச தலைவர் மன்னிப்பு வழங்கியுள்ளார்.

காணாமல்போனோர் அலுவலகம் போன்ற சுயாதீன அலுவலகங்களுக்கு விமர்சனத்திற்குரியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை இலங்கை அரசு தடுத்து வருகின்றது. காவல் நிலையங்களிலும் பல கைதிகள் மரணமடைந்து வருகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version