657 Views
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிய 108 உறவுகள் இதுவரை உயிரிழப்பு: வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி வரும் அவர்களது உறவுகள், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர் .
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலைந்து வரும் அவர்களின் உறவினர்கள், சொல்லெண்ணாத் துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து, வயோதிய ஓய்வு காலங்களில் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளிலும் ஏனைய உறவுகளின் பாதுகாப்பிலும் இருந்து வருகின்றார்கள்.
இவ்வாறு தமது உறவுகளைத் தேடியலைந்த 108 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் . அதே நேரம் வவுனியா மாவட்டத்தில் 19 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.