Tamil News
Home செய்திகள் நல்லாட்சி அரசாங்கத்தில் முன்வைத்த ஜெனிவா பிரேரணைக்கு ரணில் எதிர்ப்பு

நல்லாட்சி அரசாங்கத்தில் முன்வைத்த ஜெனிவா பிரேரணைக்கு ரணில் எதிர்ப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) கடைசி இரண்டு தீர்மானங்களும் அரசியலமைப்பிற்கு முரணானது என  இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்த போது இந்த முன்மொழிவுகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தீர்மானத்தில் போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான வெளி பொறிமுறையொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை அதற்கு ஆட்சேபனை தெரிவித்த ஜனாதிபதி உள்ளக விசாரணையை முன்மொழிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version