Home உலகச் செய்திகள் Poland நாட்டுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்ந்தோர் வழிமறிப்பு

Poland நாட்டுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்ந்தோர் வழிமறிப்பு

புலம்பெயர்ந்தவர்களை வழிமறித்துத் தடுத்து நிறுத்தி

பெலாரஸுடனான கிழக்கு எல்லை ஊடாக Poland நாட்டுக்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தவர்களை வழிமறித்துத் தடுத்து நிறுத்தியுள்ளதாக அந் நாடு தெரிவித்துள்ளது.

மேலும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் Poland நாட்டுக்குள் நுழையும் முயற்சியில்   உள்ளதாகவும்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Poland   அரசாங்கம் திங்களன்று புலம்பெயர்ந்தோர் நெருக்கடி தொடர்பில் ஆராயும் கூட்டத்தை நடத்தியது. அத்துடன், புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்த எல்லை பிராந்தியத்திற்கு 12,000  காவல்துறையினரை அனுப்பியுள்ளது.

சமீபத்திய மாதங்களில் பெலாரஸில் இருந்து சட்டவிரோதமாக தங்கள் நாட்டுக்குள் நுழைய முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக Poland, லிதுவேனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகள் கூறுகின்றன.

இதேவேளை, புலம்பெயர்ந்தவர்களின் படையெடுப்பை அடுத்து எல்லைப் பகுதியான குஸ்னிகாவில் பெலாரஸுடனான தனது எல்லைக் கடவையை மூடுவதாக Poland நாட்டு எல்லைக் காவல்படை இன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பெலாரஸில் இருந்து சட்டவிரோதமாக Poland நாட்டுக்குள் நுழைய முற்படும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் உயிர் ஆபத்துக்களை எதிர்கொள்ளக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் காலநிலை மிக மேசமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு Poland நாட்டுக்குள் நோக்கி வரும் பலர் எல்லைகள் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் Poland நாட்டின் காடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். பலர் கடும் குளிரால் உயிரிழந்துள்ளனர்.

உணவின்றியும் குடிக்க நீர் இல்லாமலும் புலம்பெயர்ந்தவர்கள் பெருமளவானோர் எல்லையில் சிக்கித் தவித்து வருகின்றனர். இவா்களில் பலர் ஆட்கடத்தல் முகவர்களால் அழைத்துச் செல்லப்பட்டுக் பணத்தைப் பெற்றுக்கொண்டு கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது

Exit mobile version