Home செய்திகள்  திருகோணமலையில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும்  மக்கள்

 திருகோணமலையில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும்  மக்கள்

IMG 20210815 WA0011  திருகோணமலையில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும்  மக்கள்

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள சிறிய மீள்குடியேற்ற கிராமமே கும்புறுப்பிட்டி கிழக்கு  நாவற்சோலை  கிராமம்.

இந்த கிராமத்தில் வாழும் மக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் உட்பட வீட்டு வசதிகளற்ற குடிசைகளில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், வாழ்வதாகவும் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இக் கிராமத்தில் சுமார் 550 குடும்பங்கள் உள்ளன. 2004 க்குப் பின் சுனாமி பேரலையின் போது மீள்குடியேற்றப்பட்டதாகவும் இன்னும் ஓலை குடிசைகள் தகரக் கொட்டில்களிலுமே வாழ்க்கையை கடந்து வருவதாகவும்  அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.

தாம்  தினக் கூலியாட்களாக உள்ளதாகவும் கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக தொழில் இன்றி   சிறு பிள்ளைகளுடன் தற்போது மிகவும் வறுமையில் வாழ்கின்றதாகவும்,  அத்தோடு இக் கிராமத்தில் குடிநீர் பிரச்சினையும் உள்ளதெனத தெரிவிக்கின்றனர்.

கடந்த நல்லாட்சி அரசில் இப் பகுதியில் சுமார் 90 குடும்பங்களுக்கான வீட்டுத் திட்ட வசதிகளை ஆரம்ப கட்டமாக செய்வதற்கு முன்வந்த நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்று கூறும் அவர்கள், தேர்தல் காலங்களில் மட்டும் வீர வசனம் பேசி வாக்குகளை சுருட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகள் தங்களது வாழ்வாதாரங்களுக்கான ஏற்பாடுகளை செய்து தருவதில்லை எனவும் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே  திருகோணமலை  கும்புறுப்பிட்டி கிழக்கு  நாவற்சோலை   கிராமத்துக்கு தேவையான அத்தனை வசதிகளையும் உரிய அதிகாரிகள் செய்து தருமாறு அம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version