Home செய்திகள் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்

பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மக்கள் அத்திவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா சதொச விற்பனை நிலையத்திலும் நீண்ட வரிசையில்  நின்று பொருட் கொள்வனவில் இன்று (13) ஈடுபட்டனர். அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இம் முறை சித்திரை புத்தாண்டை எவ்வாறு கொண்டாடுவது எனவும் கவலை வெளியிடுகின்றனர்.

தம்பலகாமம், சுங்கான் குழி, ஆலங்கேணி, ஈச்சந் தீவு பிரதேசங்களை சேர்ந்த மக்கள் பொருட் கொள்வனவில் ஈடுபட்டாலும் இம் முறை புத்தாண்டு தங்களுக்கு ஒரு சந்தோசமான நிலையை தரவில்லை எனவும் கூறியுள்ளனர்.

இந்த அரசாங்கம் வந்ததன் பிறகு தான் பொருட்களுக்கான விலை ஏற்றம் , எரிபொருள் தட்டுப்பாடு போன்றனவும் பொருளாதார நெருக்கடிக்குள் மக்களை தள்ளியுள்ளது எனவும் பொருட் கொள்வனவில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ கிராம் அரசியின் விலை 250 ரூபாவாக அதிகரித்துள்ளது. அன்றாடம் கூலித் தொழில் மூலமான வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளது. இதற்கு முழுக் காரணமும் இந்த கோட்டாபய அரசாங்கமே எனவும் மேலும் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வவுனியா நகருக்கு வருகை தரும் மக்கள் மழைக்கு மத்தியிலும் புத்தாடைகள், இனிப்பு பொருட்கள், வெடிகள் என்பவற்றையும் மரக்கறிகளையும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் வழமைக்கு மாறாக குறைந்தளவான மக்களே பொருட்கொள்வனவிலும் ஆடைக்கொள்வனவிலும் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.

சித்திரைப் புத்தாண்டு நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மிகவும் கஸ்டங்களுக்குள்ளான மக்களுக்கு உதவும் வகையிலான செயற்பாடுகள் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்றைய தினம் மருத்துநீர் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

Exit mobile version