Tamil News
Home உலகச் செய்திகள் OCI (Overease Citizen of Indian Origin) அட்டை புதிப்பித்தல் எளிதாகிறது

OCI (Overease Citizen of Indian Origin) அட்டை புதிப்பித்தல் எளிதாகிறது

OCI (இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன்) அட்டைகளை புதுப்பிக்கும் விதிகளை இந்திய உள்துறை அமைச்சகம் எளிதாக்கியுள்ளது.

20 வயதை எட்டிய பின்னர் OCI அட்டை பெறும் ஒருவர் இனி புதிய கடவுச் சீட்டு அல்லது பாஸ்போர்ட் பெற்றாலும் OCI (இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன்) அட்டையை புதுப்பிக்கத் தேவையில்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

20 வயதை அடைவதற்கு முன்னர் OCI அட்டைதாரராக பதிவுசெய்யும் ஒருவர் தான் புதிய பாஸ்போர்ட் – கடவுச் சீட்டு பெறும்போது OCI (இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன்) அட்டையை புதுப்பிக்கவேண்டும் என்ற விதி தொடரும். ஏனெனில் ஒருவரின் முகத்தோற்றம் மாறும் என்பதால் 20 வயதை அடைவதற்கு முன்னர் புதிய கடவுச் சீட்டு பெறும்போது OCI அட்டையையும் புதுப்பிக்கவேண்டும் என்று இந்திய அதிகாரி கூறினார் என எஸ்பிஎஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

Exit mobile version