Home செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவு வரம் ஆரம்பம் – நல்லூரில் இனப்படுகொலை ஆவணங்கள் காட்சிப்படுத்தல்

முள்ளிவாய்க்கால் நினைவு வரம் ஆரம்பம் – நல்லூரில் இனப்படுகொலை ஆவணங்கள் காட்சிப்படுத்தல்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ்ப்பாணம் நல்லூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆவணக் காப்பகத்தின் ஏற்பாட்டில் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள் ஆவணமாக்கப்பட்டு இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் குறித்த இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பமாகின்ற நிலையில் முன்னணியினரால் குறித்த இன அழிப்பினை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தும் செயல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Exit mobile version