Tamil News
Home செய்திகள் சுவிஸ் தூதுவர் இரா.சம்பந்தன் சந்திப்பு;அரசியல் சூழல் சம்பந்தமாக கலந்துரையாடல்

சுவிஸ் தூதுவர் இரா.சம்பந்தன் சந்திப்பு;அரசியல் சூழல் சம்பந்தமாக கலந்துரையாடல்

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பில் இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழல் சம்பந்தமாகவும் அடிப்படை மனித உரிமைகள் சம்பந்தமாக கலந்துரையாடியதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

விசேடமாக இம்முறை நடைபெறவிருக்கும் தேர்தல் சம்பந்தமாகவும் தேர்தலின் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்படவிருக்கும் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாக கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

அத்தோடு ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகள் சம்பந்தமாகவும் அரசியலமைப்பு விடயங்கள் குறித்தும் தாம் கலந்துரையாடியதாக இரா.சம்பந்தன் கூறினார்.

குறிப்பாக இலங்கை அரசாங்கம் இதுவரைகாலமும் பல ஒப்பந்தங்களை மீறி செயற்பட்டுவருவதாக தெரிவித்த அவர் அதற்கு ஒரு தீர்வு வரவேண்டும் என்பதை தாம் வலியுறுத்தியதாக சம்பந்தன் தெரிவித்தார்

Exit mobile version