Tamil News
Home செய்திகள் மகிந்தாவே மிலேனியம் சலஞ் உடன்பாட்டுக்கு முதலில் விண்ணப்பித்தார்

மகிந்தாவே மிலேனியம் சலஞ் உடன்பாட்டுக்கு முதலில் விண்ணப்பித்தார்

அமெரிக்கா சிறீலங்காவுடன் ஏற்படுத்த முனைந்து நிற்கும் சர்ச்சைக்குரிய மிலேனியம் சலஞ் என்ற உடன்பாட்டுக்கு சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்தா ராஜபச்சாவே முதலில் விண்ணப்பித்திருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்காவின் பொதுவிவகாரத் துறை அதிகாரி டேவிட் மக்குயர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மிலேனியம் சலஞ் உடன்பாட்டு நிதியை பெறுவதற்கு 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சா விண்ணம் செய்திருந்தார். 480 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த நிதி தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில் தவறான தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றது.

இந்த உடன்பாடு தொடர்பில் தற்போதைய அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா விசாரணைக் குழு ஒன்றை அமைத்தபோதும், அவர்கள் இன்றுவரை எம்மிடம் எந்த வேண்டுகோளையும் விடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version