Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் உலகை மிரளவைக்கும் இடப்பெயர்வு எண்ணிக்கை

உலகை மிரளவைக்கும் இடப்பெயர்வு எண்ணிக்கை

உலகை மிரளவைக்கும் இடப்பெயர்வு எண்ணிக்கையைக் குறைப்பதை ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் வழி தொடங்குங்கள்.

அனைத்துலக அகதிகள் தின இவ்வாண்டுக்கான மையக்கருத்தாக “மிரளவைக்கும் இடப்பெயர்வு எண்ணிக்கையை ஏற்படுத்தும் முரண்பாடுகள் முடிவுக்கு கொண்டு வரல்” என்பது முன்வைக்கப்பட்டுள்ளது. “முரண்பாடுகளாலும், துன்புறுத்தல்களாலும் நெருக்கடிகளாலும் உலகில் 80 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வாழக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இருந்து அம்மக்களைக் காப்பது என்பது நாடுகளுடைய பொறுப்பு என்பதை நினைவுக்குக் கொண்டு வர விரும்புவதாக” நாடுகளின் அனைத்துலக மன்றத்தின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குட்டரஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அவருடைய கருத்தை ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாப்பு மையமும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது. இதற்குக் காரணம் மிரளவைக்கும் இடப்பெயர்ச்சியின் மனிதத் துன்பங்களுக்கு வெளிப்படையாக ஒன்றல்ல இரண்டல்ல 1983முதல் இன்று வரை 37 நீண்ட ஆண்டுகள் நேரடிச்சாட்சியாக இருப்பது ஈழத்தமிழர்களின் நாளாந்த வாழ்வு.

உண்மையில் உலகுக்கு மிக அதிக அளவிலான இடப்பெயர்வுற்ற மக்களை வழங்கி வரும் செயற்பாட்டைத் தனது அரசாங்கத்தின் ஈழத்தமிழின அழிப்புக் கொள்கையாகவே இலங்கையின் சிங்களப் பெரும்பான்மைப் பாராளுமன்ற கொடுங்கோன்மை அரசாங்கங்கள் தொடர்ச்சியாகச் செயற்படுத்தி வருகின்றன.

இந்த மனிதக்கொடுமைகளைத் தாங்க இயலாது சனநாயக வழிகளிலும் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டும், ஈழத்தமிழர்கள் 1956 முதல் 1972வரை 16ஆண்டுகள் வன்முறையற்ற அரசியல் போராட்டங்கள் பலவற்றை முன்னெடுத்து வந்தனர்.

பின்னர் தங்கள் உயிர் உடமைகள் வாழ்வு என்பவற்றைப் பாதுகாக்கும் ஆயுத எதிர்ப்பாக தொடங்கிய மக்கள் போராட்டத்தால் 1978 முதல் 2009 வரை தங்களுக்கான நடைமுறை அரசை உருவாக்கி வாழ்ந்து வந்தனர். இவற்றை எல்லாம் ஆயுதப் படைகளின் பலத்தை இனஅழிப்புக்கான சட்டபூர்வமான கருவியாகப் பயன்படுத்தி சிங்கள பௌத்த பேரினவாதிகள் ஒடுக்கினர்.

2009 முதல் இன்று வரை மீளவும் ஆயுத அச்சுறுத்தலால் ஈழத்தமிழர்களின் அரசியல் பணிவைப் பெறுவதன் மூலம் சிறிலங்கா தன்னை அவர்களுக்குரிய அரசாகத் தொடர்வது சமகால உலகவரலாறு.

சோல்பரி அரசியல் அமைப்பின் 29(2) வது பிரிவின்படி சிறுபான்மை இனங்களுக்கோ மதத்திற்கோ எதிராகப் பாராளுமன்றச் சட்டவாக்கங்கள் செய்யப்பட்டால் மாட்சிமைக்குரிய பிரித்தானிய முடியிடம் மேன்முறையீடு செய்யலாம் என்ற நிபந்துணையுடன் 02.04.1948இல் பிரித்தானியா இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கியது. இதன்வழி 1796இல் தான் கையகப்படுத்திய ஈழத்தமிழர்களின் இறைமையை முற்று முழுதாக சிங்களப் பெரும்பான்மை அரசிடம் பிரித்தானியா கையளிக்காது தன்னிடமே வைத்துக்கொண்டு, சிங்களவர்களின் இறைமையுடன் ஈழத்தமிழர்கள் ஒற்றையாட்சிப் பாராளமன்றத்தில் தங்கள் இறைமையப் பகிர்ந்து வாழும் அரசியல் முறைமையைத் தோற்றுவித்தனர்.

ஆனால் இந்த நிபந்தனையை அரசிலமைப்பு வன்முறைப்படுத்தல் மூலம் 22.05.1972 இல் மீறி சிங்கள பௌத்த சோசலிசக் குடியரசைப் பிரகடனப்படுத்தி ஈழத்தமிழர்களை ஆள்வதற்கான அவர்களின் இறைமைப் பகிர்வை சிறிலங்கா இழந்தது. இதனால் நாடற்ற தேசஇனமாக்கப்பட்ட ஈழத்தமிழர் உரிமைப் பிரச்சினை அனைத்துலக பிரச்சினையாக மாறியது. அன்று முதல் இன்றுவரை ஈழத்தமிழர்கள் தங்களின் இறைமைக்காகவும் அரசியல் உரிமைக்காகவும் தங்களின் பிரிக்கப்பட முடியாத தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் மிக அதிக அளவிலான உயிரிழப்புகளுடன் போராடி வருவதையும் உலகறியும்.

இந்நிலையில்ää சிறிலங்கா தனது ஆயுதப்படைகள் கொண்டு ஈழத்தமிழர்களை இனஅழிப்பு செய்தன் மூலம்; உலகின் மிரளவைக்கும் இடப்பெயர்வு எண்ணிக்கையை தரும் நாடுகளில் முக்கிய நாடாகத் திகழ்வதையும் உலகு அறியும். சிறிலங்காவின் அரசியலமைப்பில் தமிழர்களுக்கான அரசியல் அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தல்; என்பது கடந்த 48 ஆண்டுகளாக நடைமுறைச்சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் சிறிலங்காவின் அரசியலமைப்பில் இருந்து தங்களை விடுவிப்பதற்கான குடியொப்பத்தை,அனைத்துலக மன்றத்தின் மேற்பார்வையில் நடாத்துவது ஒன்றே.

இலங்கையில் ஈழத்தமிழருக்கு இனங்காணக் கூடிய அச்சத்தை தரும் இடப்பெயர்வை நிறுத்துவதற்கான ஒரே வழியாக உள்ளது. இதனை இவ்வாண்டில் அனைத்துலக மன்றத்திற்கு எடுத்து விளக்கி உலகை மிரளவைக்கும் இடப்பெயர்வு எண்ணிக்கையைக் குறைப்பதை ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் வழி தொடங்குங்கள் என வலியுறத்துவதை புலம்பெயர் தமிழர்கள் தங்கள் தாயகக்கடமையாக முன்எடுக்கவேண்டும்.

Exit mobile version