Home உலகச் செய்திகள் சிங்கப்பூருக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் மலேசிய தமிழ் இளைஞருக்கு எந்த நேரத்திலும் தூக்கு

சிங்கப்பூருக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் மலேசிய தமிழ் இளைஞருக்கு எந்த நேரத்திலும் தூக்கு

மலேசிய தமிழ் இளைஞருக்கு எந்த நேரத்திலும் தூக்கு

மலேசிய தமிழ் இளைஞருக்கு எந்த நேரத்திலும் தூக்கு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து மலேசிய தமிழ் இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் தாக்கல் செய்த மனுவை சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

மேலும், தனது மனநிலை குறித்து உரிய வகையில் ஆராய ஒரு மனநல நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான நிபுணர்களை அடையாளம் காணும் வரை மரண தண்டனையை ஒத்திவைக்குமாறும் நாகேந்திரன் தரப்பில் வைக்கப்பட்ட மற்றொரு கோரிக்கையும் மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மலேசியாவில் உள்ள அவரது குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

மலேசியாவைச் சேர்ந்த 34 வயதான நாகேந்திரனுக்கு சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்தி வந்த குற்றத்திற்காக 2010ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version