Home செய்திகள் மனித உரிமைகள், நல்லிணக்கத்தைப் பாதிக்கும் சட்டங்கள் கவலையளிக்கின்றன – ஜெனீவாவில் சுட்டிக்காட்டு

மனித உரிமைகள், நல்லிணக்கத்தைப் பாதிக்கும் சட்டங்கள் கவலையளிக்கின்றன – ஜெனீவாவில் சுட்டிக்காட்டு

3 5 9 மனித உரிமைகள், நல்லிணக்கத்தைப் பாதிக்கும் சட்டங்கள் கவலையளிக்கின்றன - ஜெனீவாவில் சுட்டிக்காட்டு“மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் குடிமை வெளி என்பன தொடர்பான புதிய சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் கவலையை ஏற்படுத்துகின்றன” என மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரதான (கோர்) நாடுகளின் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடக்கிறது. இதில், நேற்று இலங்கை விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன் போது, இலங்கை விவகாரம் தொடர்பில் கையாளும் கோர் நாடுகளான கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, வடக்கு மசிடோனியா, ஐக்கிய இராச்சியம், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டு அறிக்கையை ஐக்கிய இராச்சியத்தின் துணை வதிவிடப் பிரதிநிதி ரீட்டா பிரெஞ்ச் வாசித்தார்.

அந்த அறிக்கையில், நிகழ்நிலை (ஒன்லைன்) பாதுகாப்பு சட்டம் இணைய தகவல் தொடர்புகளை கடுமையாக கட்டுப்படுத்தும். இது கிட்டத்தட்ட அனைத்து வகையான வெளிப்படுத்துகைகளையும் குற்றமாக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை கொண்டுள்ளது. மனித உரிமைகளை கட்டுப்படுத்தும் இந்தச் சட்டத்தை அர்ப்பணிப்புகளுடன் திருத்தங்களை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக இலங்கை சர்வதேச கடப்பாடுகளுக்குஇசைவான சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்தும் நாம் வலியுறுத்துகிறோம். பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 9 பேர் கடந்த நவம்பரில் விடுதலை செய்ததையும், இலங்கை பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தாமல் பேணுவதையும் நாம் ஊக்குவிக்கின்றோம்.

உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை நாங்கள் அவதானிக்கிறோம். இதே நேரம், எந்தவொரு சட்டத்தின் முன்னோடியாக நம்பிக்கையை உருவாக்குவதற்கு பங்கேற்பு செயல்முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறோம். எந்தவோர் எதிர்கால ஆணைக்குழுவும் சுயாதீனமாகவும் வெளிப்படையாகவும் இருக்கவேண்டும். பாதிக்கப்பட்ட சமூகங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய வேண்டும். முந்தைய நிலைமாறு கால நீதிச் செயல்முறைகளை கட்டியெழுப்பவும் – பொறுப்புக்கூறலுக்கான வழியை ஏற்படுத்தவும் வேண்டும்.

அடிப்படை சுதந்திரம் மற்றும் குடிமை வெளிகளுக்கு (குடிமைவெளி என்பது மக்கள் நிகழ்நிலை (ஒன்லைன்) மூலம் ஒருவரை ஒருவர் சுதந்திரமாகவும் தடையின்றியும் தொடர்பு கொள்ளவும் – ஒன்றுகூடவும் அனுமதிக்கிறது. இந்த ஒன்றுகூடல் எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலோ அல்லது ஆதரவு தெரிவிக்கும் விதத்திலோ அமையலாம்.) தீவிரமான தாக்கங்களை கொண்ட பிற சட்டங்களை அரசாங்கம் முன்வைக்கும்போது சிவில் சமூகம் உட்பட பங்குதாரர்களுடன் விரிவான ஆலோசனைகளையும் இவ்வாறான சட்டமியற்றும் செயல்முறைகளையும் ஊக்குவிக்கிறோம்.

வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பான அரசாங்கத்தின் உறுதிமொழிகளை வரவேற்கிறோம். ஆனால், வடக்கில் குறிப்பாக கிழக்கில், காணி அபகரிப்பு பதற்றங்கள் பற்றிய கவலை அறிக்கைகளை கவனத்தில் கொள்கிறோம். மேற்குறிப்பிட்ட மற்றும் பிற சவால்களை எதிர்கொள்ள மனித உரிமைகள் ஆணையாளருடனும் பணிமனையுடனும் இணைந்து செயல்படுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத் துகிறோம். மேலும், மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மான விடயத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளாா்.

Exit mobile version