அன்னை பூபதி அவர்களின் உண்ணாவிரதம் 19.03.1988 அன்று தொடங்கியது
Home செய்திகள் கச்சத்தீவு திருவிழா: இந்தியர்களுக்கு அனுமதி

கச்சத்தீவு திருவிழா: இந்தியர்களுக்கு அனுமதி

இந்தியர்களுக்கு அனுமதி

இந்தியர்களுக்கு அனுமதி: கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்திய பக்தர்கள் பங்கேற்பதற்கான அனுமதி வழங்கப்படும் என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனைக்கு அமைய, திமுகவின் மூத்த தலைவர் ஒருவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடல்களின் போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவிக்கின்றது.

வருடாந்த திருவிழாவில் கலந்துக்கொள்ளும் இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தி, கடற்றொழிலாளர்களின் ஆராக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு வருடாந்த திருவிழா, எதிர்வரும் மார்ச் மாதம் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version