Home ஆய்வுகள் ஈரானின் தாக்குதல் வெற்றியா? தோல்வியா? – வேல்ஸில் இருந்து அருஸ்

ஈரானின் தாக்குதல் வெற்றியா? தோல்வியா? – வேல்ஸில் இருந்து அருஸ்

q2 ஈரானின் தாக்குதல் வெற்றியா? தோல்வியா? - வேல்ஸில் இருந்து அருஸ்ஈரானின் தாக்குதல் வெற்றியா தோல்வியா என்ற விவாதங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஈரானின் ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியதை வெற்றியாக மேற்குலகம் வர்ணித்தாலும், உண்மையில் இந்த தாக்குதல் என்பது ஈரான் எதிர்பார்த்த தைவிட அதற்கு வெற்றியையே கொடுத்துள்ளது என்பது தான் உண்மை.

தாக்குதல் அதிக சேதங்களை விளை விக்கவில்லை என்று கூறப்பட்டாலும் அது தோல்வியல்ல என்பதே யதார்த்தம்.

ஏன் என்பதற்கான காரணங்கள் இதோ

கடந்த 14 ஆம் நாள் இரவு ஈரானும் ஈராக், ஏமன், சிரியாவில் உள்ள அதன் ஆதரவு படையினரும் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் மற்றும் ஏவுகணை தாக்குதலை தொடுத்திருந்தனர். இந்த தாக்குதல் அதிர்ச்சிகரமானது அல்ல. கடந்த ஏப்பிரல் முதலாம் நாள் இஸ்ரேல் வான்படையின் எப்-35 விமானங்கள் நவாட்டிம் வான்படைத்தளத்தில் இருந்து இரகசியமாகச் சென்று சிரியாவின் தலைநகர் டமஸ்கசில் இருந்து ஈரானின் தூதரகத்தில் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்த காட் படைப்பிரிவு எனப் படும் ஈரானின் வெளியக புலனாய்வு மற்றும் தாக்குதல் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் பிரதிக்கட்டளை அதிகாரி உட்பட 3 ஜெனரல் தர அதிகாரிகளையும் மேலும் 7 தூதரக அதிகாரிகளையும் படுகொலை செய்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி வழங்கப்படும் என ஈரான் தெரிவித்து வந்திருந்தது. அதுமட்டுமல்லாது தாக்குதல் இடம் பெறுவதற்கு 72 மணிநேரத்திற்கு முன்னரே அது அரபு நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் தான் இஸ்ரேலை தாக்கப்போவதாக தெரிவித்திருந்தது. அதாவது யாருமே தொடமுடியாத வல்லரசு நாடுகள் என கணிக்கப்பட்ட நாடுகளுக்கு 72 மணிநேரத்திற்கு முன்னர் தகவல் அனுப்பிவிட்டு மேற்கொள்ளப்பட்ட முதலாவது தாக்குதல் இது வாகும். உண்மையான வாக்குறுதி என்பது இந்த படை நடவடிக்கைக்கு ஈரான் இட்டபெயர்.

ஈரானின் பதில் தாக்குதல் என்பது எதிர் பாராதது அல்ல. ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஈரான் பதிலடி கொடுத்தே வந்துள்ளது. ஆனால் இந்த முறை அது மாறுபட்டது அதாவது இஸ்ரேலை முதல்முறையாக நேரிடையாக தாக்கியுள்ளது. தொழில்நுட்பரீதியாக பார்த்தால் ஈரானின் ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் எதிரிகளின் வான்பாதுகாப்பை உடைத்து ஊடுருவியுள்ளன.

ஈரானின் கைப்பசொனிக் எவுகணைகளையும், ஆளில்லாத தாக்குதல் விமானங்களையும் அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் ரடார்களால் தடுக்கமுடியவில்லை, அதாவது ரஸ்யாவின் கைப்பசொனிக் ஏவுகணைகளை வீழ்த்தியதாக இதுவரை காலமும் கூறிவந்த கதைகளை எல்லாம் ஈரானின் தாக்குதல் பொய்யாக்கியுள்ளது. அதா வது அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் வான் பாதுகாப்பை ஈரானின் கைப்பசொனிக் ஏவு கணைகள் ஊடுருவும்போது ரஸ்யாவின் கின்சால் ஏவுகணைகளை தடுப்பது இலகுவானதல்ல.

இந்த தாக்குதலின் வெற்றி தோல்விகளை சிலர் 120 நிமிட கொலிவூட் அக்சன் திரைப்படம் போல விவாதிக்கின்றனர். ஆனால் சான் சூ நூறு வருடங்களுக்கு முன்னர் கூறியது போல 100 சண்டைகளில் பங்கெடுத்து 100 சமர்களையும் வெல்வது திறமையல்ல மாறாக முன்னர் எப்போதும் பாத்திராத களமுனையில் வெல்வது தான் திறமை. அதனைத் தான் ஈரான் எட்டியுள்ளது.

சதுரங்க ஆட்டத்தில் மிகப்பெரும் ஆட்டக் காரரை தாக்கியுள்ளது ஈரான். அதாவது இந்த விளையாட்டு இன்னும் முடியவில்லை. டமஸ்கஸ் தாக்குதலின் பின்னர் இஸ்ரேலை தாக்க ஈரான் தயாரானபோதும் அது மூன்றாவது உலகப்போரை ஆரம்பிக்கவிரும்பவில்லை. ஆனால் அது தனது தாக்குதலின் குறிக்கோளை 3 வழிகளில் எட்டியுள்ளது. முதலாவது துணைஇராணுவக் குழுக்களின் மூலம் தாக்காது நேரிடையாக தாக்கியுள்ளது. இரண்டாவது பல ஏவுகணைகள் விமானங்கள் சுட்டுவீழ்த் தப்பட்டபோதும் நவாட்டிம் என்ற இஸ்ரேலின் இரண்டாவது பெரிய வான்படைத்தளத்தை தாக்கியுள்ளது. மூன்றாவது இஸ்ரேல் திருப்பித் தாக்கவில்லை.

2020 ஆம் ஆண்டு ஈராக்கில் வைத்து காட் படையணியின் கட்டளை அதிகாரியான ஜெனரல் சொலமனியை அமெரிக்கா தாக்கியழித்ததற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களை ஈரான் தாக்கிபோதும் அமெரிக்கா ஈரானை திருப்பித் தாக்கவில்லை. எனினும் இதற்கான பதிலடியை இஸ்ரேல் கொடுக்குமா இல்லையா என்பதை இப்போது கூறமுடியாது.

ஆனால் இந்த படைநடவடிக்கை மூலம் ஈரான் எதனை சாதித்தது என்பதே முக்கியமானது. அதாவது ஈரானின் நடவடிக்கை என்பது படைத்துறை வெற்றியைவிட அதிகளவில் அரசியல் வெற்றியை ஈட்டியுள்ளது. அமெரிக்காவுடன் போரை மேற்கொள்ள ஈரான் விரும்பவில்லை. அதனை தான் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு விரும்பியிருந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை.

தன்னிடம் உள்ள மிகச் சிறந்த தற் கொலைத்தாக்குதல் விமானங்களையும், ஏவுகணை களையும் அது பயன்படுத்தவில்லை. சாராணை ஆயுதங்களையே பரீட்சித்து பார்த்திருந்தது. ஆனால் அந்த சாராணை விமானங்களும், ஏவு கணைகளும் இஸ்ரேலின் வான்பாதுகாப்பை உடைத்து உள்நுளைந்ததுடன், இஸ்ரேலுக்கு அதிக பொருளாதார இழப்பையும் கொடுத்துள்ளது. அதாவது ஈரானுக்கு ஏறத்தாழ 60 மில்லியன் டொலர்கள் செலவானபோதும், இஸ்ரேலுக்கு 1200 மில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளது.

இஸ்ரேலை தாக்கமுடியாது என்ற தோற் றப்பாட்டை ஈரான் மீண்டும் உடைத்துள்ளது. ஈரானின் பிரதான குறிக்கோள் கடந்த வருடம் ஒக்டோபர் 7 ஆம் நாள் ஹமாஸ் செய்ததுபோல இஸ்ரேலைக் குழப்புவது.

இப்போது இஸ்ரேல் என்ன செய்வது? ஈரானின் ஆதரவு படைகளை வேறு நாடுகளில் வைத்து தாக்குவதா? அதனை தான் அவர்கள் இதுவரைகாலமும் செய்துவந்தனர்.

அப்படியானால் ஈரானை நேரிடையாக தாக்குமா இஸ்ரேல் அது மிகப்பெரும் போரை அந்த பிராந்தியத்தில் ஏற்படுத்திவிடும். அமெரிக்காவையும் அதற்குள் இழுத்துவிடும். அமெரிக் காவுக்கு தற்போது தேர்தல் ஆண்டு வேற. அதாவது தற்போது பந்து இஸ்ரேலின் பக்கம். அதாவது ஏப்பிரல் 1 ஆம் நாள் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் ஈரான் என்ன நிலையில் இருந்ததோ அதேநிலையில் தற்போது இஸ்ரேல் உள்ளது. இந்த சவாலை இஸ்ரேல் தீர்க்குமா?

ஈரான் மக்களை அல்லது இலக்குகளை இஸ்ரேல் தாக்கினால் திரும்பவும் கடுமையாக தாக்குவோம் என ஈரானின் முப்படைகளின் தளபதி ஜெனரல் கொசீம் சலாமி தெரிவித்துள்ளார்.

அதாவது ஏப்பிரல் 14 தாக்குதல் என்பது பதிலடி அல்ல ஈரான் புதிய ஒரு விதியை நிறுவியுள்ளது. சொல்லைவிட செயல் முக்கயமானது என்பது தான் அது. அதாவது போரை ஆரம்பிப்பதற்காக ஈரான் இஸ்ரேலைத் தாக்கவில்லை, இஸ்ரேலுக்கு உள்ளேயும் எம்மால் எந்த இலக்கையும் தாக்கமுடியும் என்பதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் துணையுடன் இஸ்ரேல் தக்கவைத்திருந்த தனது ஆழுமையை அது இழந்துவருகின்றது.

Exit mobile version