Home செய்திகள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் இன்று…

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் இன்று…

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் இன்று

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள்-   சரீர ரீதியாகவோ, புலன் ரீதியாகவோ நீண்ட கால இயலாமை அல்லது மட்டுப்படுத்தப்பட்ட தன்மையுடையவர்கள் மாற்றுத் திறனாளிகளவர்.

உலகில் 15% மக்கள் ஏதாவது ஒரு வகையான இயலாமையை அனுபவிக்கிறார்கள்.  இதில் 80 வீதமானவர்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வாழுகிறார்கள். இலங்கையில் சராசரியாக 8.7 வீதமான மாற்றுத்திறனாளிகள் வாழுகின்றனர்.

இலங்கையில் கடந்த கால போரினால் இந்த வீதங்கள் அதிகரித்த நிலைமையே காணப்படுகின்றது. முக்கியமாக குருநாகல் மற்றும் வன்னிப் பிரதேசங்களில் இந்த வீதமானது 12 வீதத்துக்கும் அதிகமாகக் காணப்படுகின்றது.

மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் சாதாரண மனிதர்களே. அவர்களை சாதாரண மனிதர்கள் போல் வாழுவதற்கு அவர்களுக்கான உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு அனைத்து விடயங்களிலும் அவர்களை உள்வாங்கியதாக செயற்படவேண்டும்.

மேற்குலக நாடுகளோடு ஒப்பிடுமிடத்து இலங்கையில் அவர்களுக்கான செயற்பாடுகள் மிகவும் குறைவாகவே உள்ளது. இலங்கையில் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் மாற்றுத் திறனாளிகள் அரசாலும் ஏனையவர்களாலும் ஒரம் கட்டப்படுகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள் பல சாதனைகளைச் செய்துள்ளார்கள். அனைவரும் அறிந்த விடயம்.  ஆகவே அவர்களை இயலாதவர்கள் என நோக்காது அவர்களின் இயலுமையையே நோக்குதல் வேண்டும். அதானால்தான் தமிழில் மாற்றுத்திறனாளி  என்ற பதம் உபயோகிக்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேசமாற்றுத் திறனாளிகள் நாள் கோசம் “கோவிட் 19க்கு பிந்தைய உலகத்தை உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் நிலையான உலகை நோக்கி மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவமும் பங்கேற்பும்” என்பதாகும்.

அந்த வகையில் அவர்களை உட்படுத்தாது மேற்கொள்ளப்படும் எந்த அபிவிருத்தியும் வெற்றியடையாது அந்த சமூகமோ நாடோ அபிவிருத்தியடையாது.

மாற்றுத்திறனாளிகளை  சக மனிதர்களாக அவர்களின் உணர்வுகள், திறன்களை மதித்தும் மேம்படுத்தியும் உதவுவோம். அவர்களும் தங்களின் திறன்களைக் கண்டறிந்து சாதனை படைப்பதோடு சக நபர்களுக்கும் கைகொடுத்தல் சக வாழ்க்கையை அனுபவிக்க வழிசமைக்கும்.

Exit mobile version