Tamil News
Home செய்திகள் ‘ஐ.எம்.எப் கடன் இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும்’-மத்திய வங்கியின் ஆளுநர்

‘ஐ.எம்.எப் கடன் இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும்’-மத்திய வங்கியின் ஆளுநர்

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து கடன் வசதி இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாயண நிதியத்துடன் கலந்துரையாடி வருவதாகவும், அதன் முதல் படி, அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பில் பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை எட்டுவதாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கடன் இலக்குகளை அடைவதில் எந்த சிக்கலும் இல்லையெனவும், இதனால் உள்நாட்டு கடனை மறுசீரமைக்காமல் நிலைமையை நிர்வகிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version