Home செய்திகள் தடைகளை உடைத்து மக்கள் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீர நாள்…

தடைகளை உடைத்து மக்கள் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீர நாள்…

வடக்கு, கிழக்கில் மாவீரர் நாளான நேற்று பெருந்திரளான மக்கள்  ஒன்றுதிரண்டனர் பெரும் எழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர்.

வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும், விடுதலைக்கான பயணத்தில் உயர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு  வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

May be an image of 2 people and grass

நேற்று மாலை 6.05 மணியளவில், மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட மௌனவணக்கத்தை அடுத்து, 6.07 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்ததன் பிரகாரம் மாவீரர்தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், யாழ்.மாவட்டத்தில் தீவகம் சாட்டி, கோப்பாய்,, கொடிகாமம், உடுத்துறை, ஆகிய மாவீரர் துயிலும் இல்லங்களிலும், வல்வெட்டித்துறை தீருவில் திடல், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றனர்.

அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில், கனகபுரம் விசுவமடு, முழங்காவில் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், மன்னார் மாவட்டத்தில், ஆட்காட்டிவெளி, பண்டிவிரிச்சான் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளியவளை, அலம்பில், ஆலங்குளம், வன்னிவிளாங்குளம், தேராவில் உள்ளிட்ட மாவீரர் துயிலுமில்லங்களிலும், வவுனியாவில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்திலும் வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில், மாவடிமுன்மாரி, தரவை, வாகரை கண்டலடி ஆகிய மாவீர துயிலும் இல்லங்களிலும், தாண்டியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக பகுதியிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறுகின்றதுடன் , அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடியாறு துயிலுமில்லத்திலும், திருகோணமலையில் ஆழங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

திருகோணமலை சம்பூர் ஆலங்குளத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி. மாவீரர் தின நாளான  நேற்று திருகோணமலை, சம்பூர் ஆலங்குளம் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக அக வணக்கத்துடன் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் பெரும்பாலான உறவுகள் ஈகைச் சுடரேற்றி அஞ்சலிகளை செலுத்தினர்.

புலம் பெயர் நாடுகளில் நடைபெற்ற மாவீரர் நாள்…

 

Exit mobile version