181 Views
அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆர்க்டிக் உறைபனியின் தாக்கத்தால் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசோசியேட்டர் பிரஸ் அளித்துள்ள தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, 2 இலட்சத்திற்கும் குறைவான வீடுகளில் மட்டுமே மின்சாரம் இல்லை. இது ஒரு கட்டத்தில் 17 இலட்சம் என்கிற அளவில் உச்சத்தில் இருந்தது.
ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால் இலட்சக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவில் 5.5 கோடி பேருக்கும் அதிகமானோர் வசிக்கும் பகுதிகள் இன்னும் கடுங்குளிர் எச்சரிக்கையின் கீழ் உள்ளன. வளிமண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் ஏற்பட்ட பனிப்புயல் எதிரொலியாக நிலவும் கடும் பனி, பலத்த காற்று காரணமாக அமெரிக்கா முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.