Tamil News
Home செய்திகள் அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி: வெளிநாடு செல்லும் இளைஞர்கள்

அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி: வெளிநாடு செல்லும் இளைஞர்கள்

இலங்கையில் தொடரும் நெருக்கடி காரணமாக இந்த வருடத்தில் இதுவரை 221,023 பேர்  வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கான  வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக அதன் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் நாட்டிலிருந்து மூன்று இலட்சம் பேரை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இலக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version