Tamil News
Home செய்திகள் யாழ்ப்பாணம்:18 மற்றும் 23 வயதுக்கு இடைப்பட்டவர்களே போதைப் பொருள் பாவனைக்கு அடிமை எனத் தகவல்

யாழ்ப்பாணம்:18 மற்றும் 23 வயதுக்கு இடைப்பட்டவர்களே போதைப் பொருள் பாவனைக்கு அடிமை எனத் தகவல்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளைப் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட் களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர் களுக்கான சிகிச்சை மையத்தில் இரண்டு மாத கால பகுதிக்குள் 134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்களே எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் அதிக போதைப் பாவனைக்கு உள்ளான வர்கள் வாழும் கிராமமாக சுமார் 20 கிராமங்கள் அடையாளப்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் இந்தப் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு, அரசியல் தலைவர்கள், மதத் தலை வர்கள், சிவில் சமூகத்தினர் முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version