Home செய்திகள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டாம்; முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டாம்; முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

தேர்தலை நடத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிடவேண்டும்மாகாணசபைத் தேர்தல் இடம்பெற்றால் பெறுபேறு அரசாங்கத்துக்கு பாதகமாக அமையும் என்பதனால் தேர்தலை நடத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிடவேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

மக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளார்கள் என சுட்டிக்காட்டிய அவர், மாகாண சபை தேர்தலுக்கு ஒதுக்கும் நிதியை நடுத்தர மக்களின் முன்னேற்றத்துக்கு அரசாங்கம் ஒதுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படும் தரப்பினரை திருப்திப்படுத்துவதற்காகவே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு தேர்தலை நடத்தவேண்டாம் என வலியுறுத்தி 12 பௌத்த அமைப்புக்களின் தலைவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் ஜனாதிபதி செயற்படுவார் என நம்புவதாகவும் ஆனந்த தேரர் தெரிவித்தார்.

மேலும் புதிய அரசமைப்பின் ஊடாக மாகாண சபைத் தேர்தல் முறைமையை முழுமையாக இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதியிடம் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளதாகவும் ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.

Exit mobile version