Home செய்திகள் உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணை – பாராளுமன்றத்தில் இரு நாள் விவாதம்

udaya 800 உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணைவலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதம் நடத்த தீர்மானிக்கப் பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருக்கு எதிராக கொண்டுவரப்படும் முதலாவது நம்பிக்கையில்லாத் தீர்மானம் இதுவாகும்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

Exit mobile version