Home செய்திகள் ரம்புக்கனையில் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கு இன்று – முப்படையினர் பலத்த பாதுகாப்பு

ரம்புக்கனையில் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கு இன்று – முப்படையினர் பலத்த பாதுகாப்பு

உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கு

ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினரது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளதை அடுத்து முப்படையினரும் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இன்றைய தினம் உயிரிழந்தவரது இறுதிக் கிரியைகள் இடம்பெற உள்ளதை அடுத்து பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இறுதிச் சடங்குகள் நிறைவடையும் வரை அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட முப்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளரிடம் காவல்துறைமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12 (1) வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க,  21.03.2022 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி 2272/10 மூலம்,  கேகாலை மாவட்டத்துக்கு உட்பட்ட தேவாலேகம, ரம்புக்கன மற்றும் கேகாலை ஆகிய காவல்துறை பிரிவுகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு நேற்று முதல் இன்றுவரை ஆயுதம் தாங்கிய முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version