பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் காவல்துறை தலைவர் (ஐ.ஜி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் பாகிஸ்தான் டெஹ்ரீக் இ இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவர் ஃபவாத் செளத்ரி, தமது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டார். அந்த நேரத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் துன்புறுத்தப்பட்டனர். அடையாளம் தெரியாத சிலரால் பெயர் குறிப்பிடாத இடத்திற்கு இம்ரான் கான் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி. உள்துறை செயலாளர் மற்றும் போலீஸ் ஐ.ஜி ஆகியோர் 15 நிமிடங்களில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்,” என்று கூறியுள்ளார்.