Home செய்திகள் கொட்டும் மழையிலும் 3ஆவது நாளாக கல்முனையில் தொடரும் ஆர்ப்பாட்டம்

கொட்டும் மழையிலும் 3ஆவது நாளாக கல்முனையில் தொடரும் ஆர்ப்பாட்டம்

kk கொட்டும் மழையிலும் 3ஆவது நாளாக கல்முனையில் தொடரும் ஆர்ப்பாட்டம்கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிர்வாக அடாவடித்தனத்துக்கு எதிராக நீதி கோரி நடத்தும் மக்கள் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் கொட்டும் மழையிலும் ஆக்ரோஷமாகத் தொடர்கின்றது.

“அரசியல்வாதிகளே, அரச அதிகாரிகளே, அமைச்சின் செயலாளரே உங்கள் பதில் என்ன?” என்று அங்கு குழுமியிருந்த மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள். நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களுமாக பிரதேச செயலத்தின்
முன்னால் வீதி அருகே அமர்ந்து அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.

நேற்று மற்றும் நேற்றுமுன் தினத்தை விட இன்று அதிகளவான பொதுமக்கள் அங்கு கூடத் தொடங்கினர். பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மேலும் கூறுகையில், “கல்முனை வடக்கு பிரதேச தமிழ் மக்கள் அரச சேவைகளைப்
பெறும் அடிப்படை உரிமைகள் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டு மாற்றின அரசியல்வாதிகளால் பறிக்கப்பட்டு வருகின்றமை நாடறிந்த விடயம்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் 30 வருடங்களாக தடுக்கப்பட்டு வருவதுடன் அண்மைக்காலமாக இருக்கும் அதிகாரங்களும் பறிக்கப்பட்டும் வருகின்றன. பறிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கும் இயங்கிக் கொண்டிருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான அரச அதிகாரங்களைப் பெற்று மக்களுக்கான அரச சேவையைப் பெறுவதற்கு முடியாமல் கடந்த 30 வருடங்களாகத் தவித்துக் கொண்டிருக்கும் இப் பிரதேச மக்கள் நேற்றுமுன்தினம் அமைதிப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இன்று மூன்றாவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது. பெருமளவான பொதுமக்கள் பங்குபற்றி வருகின்றனர்.

Exit mobile version