Home செய்திகள் கிழக்கு மாகாணத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கிழக்கு மாகாணத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கிழக்கு மாகாணத்தில் குறைந்து வரும் கொரோனா

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று மற்றும் மரணங்களினது  எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் குறைந்து வரும் கொரோனா நிலவரம் தொடர்பாக இன்று   ஊடகங்களுக்கு  கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், 2021 ஓகஸ்ட் 3ஆம் மற்றும் 4ஆம் வாரங்களில் சராசரியாக 6,000 தொற்றாளார்களும் 100 மரணங்களும் கிழக்கு மாகாணத்தில் பதிவாகின.

“எனினும், செப்டம்பர் முதலாம் வாரத்தில் 4,400 தொற்றாளர்களும் இரண்டாம் வாரத்தில் 3,300 தொற்றாளர்களும் 80 மரணங்களும், மூன்றாம் வாரத்தில் 2,000 தொற்றாளர்களும் 67 மரணங்களும்  நான்காம் வாரத்தில் 1,104 தொற்றாளர்களும் 42 மரணங்களும் ஐந்தாம் வாரத்தில் 801 தொற்றாளர்களும் 12 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதன் படி கிழக்கு மாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் படிப்படியாக குறைந்துகொண்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது” என்றார்.

Exit mobile version